2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை

2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை

ஐந்தாண்டு காலம் ஊதியம் இல்லாது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த வருடம் (2022) ஜூன் மாதம் 22 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு  செல்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது.

 

அதன்படி, கடந்த 1ஆம் திகதி வரை உள்நாட்டு விடுமுறைக்கான 150 விண்ணப்பங்களும், வெளிநாட்டு விடுமுறைக்கான 1000 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

கடந்த 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாத்திரம் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் எனவும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

 

பல அரச ஊழியர்கள் கொரியாவுக்குச் செல்வதற்காக வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கின்றனர். பெரும்பாலான விண்ணப்பங்கள் மொழிப் பிரச்சினை காரணமாக நிராகரிக்கப்படுகின்றன. எனினும், மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு மீண்டும் விண்ணப்பிப்பார்கள். அதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். அதன்படி, வெளிநாட்டு விடுவிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மூலம் - தினகரன் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image