20,000 இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடம் 8,000 ஆக எவ்வாறு குறைந்தது?
20,000 இற்கும் அதிகமான ஆசிரியர் பதவி வெற்றிடம் 8,000 ஆக எவ்வாறு குறைந்தது என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்த அந்த சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரே,
20,000 இற்கும் அதிகமான ஆசிரியர் பதவி வெற்றிடம் 8,000 ஆக எவ்வாறு குறைந்தது?
அனைத்து வெற்றிடங்களையும் கணக்கிட்டு, வேலையற்ற பட்டதாரிகள் விண்ணப்பம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியுள்ளது.
8,000ஆசிரியர்களை புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அது தொடர்பான செய்தி இந்த இணைப்பில் 8,000 ஆசிரியர்களை புதிதாக நியமிக்க பரீட்சை நடத்த நடவடிக்கை