8,000 ஆசிரியர்களை புதிதாக நியமிக்க பரீட்சை நடத்த நடவடிக்கை

8,000 ஆசிரியர்களை புதிதாக நியமிக்க பரீட்சை நடத்த நடவடிக்கை

8,000ஆசிரியர்களை புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்வியியற்கல்லூரிகளில் அதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கிணங்க அடுத்த வருட ஆரம்ப பகுதியில் 8000ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வருடம் மற்றும் கடந்த வருடம் என இரண்டு ஆண்டுகளுக்குள் 8,000 பேருக்கு பரீட்சை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தின் போது அந்த 8000 பேருக்கும் நியமனம் வழங்க எதிர்பார்க்கின்றோம்.

ஏனெனில் வழமையாக கல்வித்துறையில் 4000 முதல் 5000 இற்கு இடையிலான ஆசிரியர்கள் வழமையான முறைமைக்கு அமைய ஓய்வு பெறுகின்றனர். என்றும் கடந்த ஆண்டு ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டால் ஓய்வுபெற வேண்டிய ஆசிரியர்கள் சேவையில் நீடித்தனர். எனவே இந்த ஆண்டு ஓய்வு பெறவேண்டி உள்ளவர்களையும் சேர்க்கும்போது அந்த எண்ணிக்கை மொத்தமாக 8000 ஆகின்றது. எனவே அந்த அந்த 8000 ஆசிரியர்களுக்காக அடுத்த வருட ஆரம்ப பகுதியில் 8000ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை குறித்து தொழிற்சங்கம் ஒன்றின் கருத்து

மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் விசேட அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image