அரச ஊழியர்களுக்கு 191 நாட்கள் மாத்திரமே பணி

அரச ஊழியர்களுக்கு 191 நாட்கள் மாத்திரமே பணி

வருடத்தில் 365 நாட்கள் இருந்தபோதிலும் அரச ஊழியர்கள் 191 நாம்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (02) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவுசெலவு திட்டத்தின் மீதான விவாதத்தின்போது கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன்கூடிய 45 நாட்கள் விடுமுறை உள்ளது. சுமார் 149 அரச விடுமுறை நாட்கள் உள்ளன. அதற்கமை அரச ஊழியர்கள் 365 நாட்களில் 191 நாட்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர்.

பாரிய பிரச்சினையொன்று உள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே உற்பத்தித்திறன் செயலகத்திற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

தமது இலக்குகளுக்கு அமைவாக செயற்படும் முறைமையை கண்டறிய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image