கொவிட் 19 தாக்கம்- மேலதிக ரயில்கள் சேவையில்

கொவிட் 19 தாக்கம்- மேலதிக ரயில்கள் சேவையில்

தற்போது நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் 19 பரவலை கவனத்திற்கொண்டு பொதுப்போக்குவரத்தில் சமூக இடைவௌியை பேணுவதற்காக மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ரயில் திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இருக்கையின் எண்ணிக்கைக்கமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு்ள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். பொதுவௌியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மக்களிடையே சமூக இடைவௌியை கடைபிடித்து பயணிக்கும் வகையில் ஐந்தாயிரம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image