மார்ச் 14 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்
மார்ச் 14 மருத்துவ விடுமுறை போராட்டம் தொடர்பான அறிவிப்பை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
அரச சேவை மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு இன்றைய தினம் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செயலாளர்,
அரச சேவை மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு - 07
*மார்ச் 14 மருத்துவ விடுமுறை (medical leave ) அறிக்கையிடுதல் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக*
அரச சேவைகள் மற்றும் மாகாண அரச சேவைவைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பிரச்சினைகள் பல எண்ணிக்கையிலானவற்றை உங்களுடைய காலம் உட்பட கடந்த காலங்கள் பூராகவும் பல்வேறு காலங்களில் சங்கம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 99 தொடக்கம் 2022 வரை இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான பதவி உயர்வு முறையை இது வரைக்கும் நிறுவப்படவில்லை அதே போன்று கடமைப் பட்டியலும் இல்லை.
2. ஒரு காலகட்டத்திற்கும் மேல் காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகள் பலவற்றை முதன்மைப்படுத்தி எங்களது சங்கம் ஊடாக 2022.03.14 திகதி மருத்துவ விடுமுறையை அறிக்கை செய்து ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள்.
1. பதவி உயர்வுக்கான ஒரு முறைமை கடமைப்பட்டியல் மற்றும் முறையான இடாமாற்றம் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை கட்டமைப்பை பெற்றுக்கொள்ளுதல்.
2. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை கட்டமைப்பை பெற்றுக்கொள்ளுதல்.
3. அணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் நிரந்தரம் செய்யும் போது இழந்த சேவைக்காலத்தை பெற்றுக்கொள்ளுதல்.
4. அரச, அரை அரசு மற்றும் தனியார் சேவையாளர்களின் சம்பளத்தை ரூபா. 15000 ஆல் அதிகரித்து பெற்றுக்கொள்ளுதல்.
5. 2016 ஆண்டின் பின்னர் இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள காப்புறுதியை பெற்றுக்கொள்ளுதல்.
போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைப்போம்.
பிரதிகள் -
ஜனாதிபதியின் செயலாளர் / பிரதமரின் செயலாளர்
ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்
அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும்
அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும்
அனைத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கும்/ அனைத்து மாகாண ஆளுனர்களின் செயலாளர்களுக்கும்
அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும்/ அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்.
மேலும் செய்திகள்