சர்வதேச மகளிர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மாணவி

சர்வதேச மகளிர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மாணவி

சர்வதேச மகளிர் தினமான நேற்றைய நாளில், பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.


பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, நேற்றுப்பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பழைய தகராறு ஒன்றின் காரணமாக, மாணவியின் மீது நபர் ஒருவர் கோடரியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தாரென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்தப் பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

33 வயதான குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்ய, நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image