367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு: பட்டியல் இணைப்பு

367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு: பட்டியல் இணைப்பு

அத்தியாவசியமற்ற 367 பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாளை (09) முதல் அமுலுக்கு வரவுள்ளன.

சில பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக வரி அதிகரிப்புடன் அனுமதிப்பத்திர நடைமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரியினால் அனுமதி பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னதாக நிதியமைச்சின் செயலாளரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய,

◼️ இறைச்சி மற்றும் மீன் உற்பத்திகள்
◼️ பால் சார்ந்த உற்பத்திகள்
◼️ பழங்கள்
◼️ மா சார்ந்த உற்பத்திகள்
◼️ உடனடி உணவு வகைகள்
◼️ சொக்லட்
◼️ பாஸ்தா வகைகள்
◼️ மதுபானம் உள்ளிட்ட பானங்கள்
◼️ சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திகள்
◼️ வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகுசாதன பொருட்கள்
◼️ வாய் சுகாதாரத்துடன் தொடர்புடைய தயாரிப்புகள்
◼️ மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகள்
◼️ இறப்பர் தயாரிப்புகள்
◼️ பயணப் பைகள்
◼️ தோல் தயாரிப்புகள்
◼️ கார்பட்
◼️ ஆடைகள்
◼️ காலணிகள்
◼️ குடைகள்
◼️ சீப்பு
◼️ செரமிக் தயாரிப்புகள்
◼️ கண்ணாடி தயாரிப்புகள்
◼️ மின்சாதன பொருட்கள் அல்லாத வீட்டுப் பாவனைப் பொருட்கள்
◼️ சமையலறை உபகரணங்கள்
◼️ கணினி பாகங்கள்
◼️ மூக்குக் கண்ணாடி
◼️ கடிகாரங்கள்
◼️ இசைக் கருவிகள்
◼️ விளையாட்டுப் பொருட்கள்

ஆகியவற்றை கட்டுப்படுத்தவே புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

367 பொருட்கள் தொடர்பான அறிவித்தல் இந்த இணைப்பில்

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

275556612_511019590584581_6380241708514753071_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image