120,000 அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரச்சினை தொடர்பாக...

120,000 அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரச்சினை தொடர்பாக...

அரச சேவையில் அதிக பங்காளர்களாக இருப்பது அபிவிருத்தி உத்தியோகத்தர்களாவர். முhகாண அரச சேவையிலும், அரச சேவையிலும் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் இருக்கின்றனர்.

அவர்களுக்கு இருக்கின்ற கோரிக்கைகளை நாங்கள் கடந்த காலமாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்வைத்தோம். ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஆட்சியாளர்கள் தவறி வருகின்றனர்.

இந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

மார்ச் 14 போராட்டத்தின்போது முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள்

அரச சேவைகள் மற்றும் மாகாண அரச சேவைவைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பிரச்சினைகள் பல எண்ணிக்கையிலானவற்றை உங்களுடைய காலம் உட்பட கடந்த காலங்கள் பூராகவும் பல்வேறு காலங்களில் சங்கம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 99 தொடக்கம் 2022 வரை இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான பதவி உயர்வு முறையை இது வரைக்கும் நிறுவப்படவில்லை அதே போன்று கடமைப் பட்டியலும் இல்லை.
 
2. ஒரு காலகட்டத்திற்கும் மேல் காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகள் பலவற்றை முதன்மைப்படுத்தி எங்களது சங்கம் ஊடாக 2022.03.14 திகதி மருத்துவ விடுமுறையை அறிக்கை செய்து ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள்.
 
1. பதவி உயர்வுக்கான ஒரு முறைமை கடமைப்பட்டியல் மற்றும் முறையான இடாமாற்றம் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை கட்டமைப்பை பெற்றுக்கொள்ளுதல்.
 
2. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை கட்டமைப்பை பெற்றுக்கொள்ளுதல்.
 
3. அணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் நிரந்தரம் செய்யும் போது இழந்த சேவைக்காலத்தை பெற்றுக்கொள்ளுதல்.
 
4. அரச, அரை அரசு மற்றும் தனியார் சேவையாளர்களின் சம்பளத்தை ரூபா. 15000 ஆல் அதிகரித்து பெற்றுக்கொள்ளுதல்.
 
5. 2016 ஆண்டின் பின்னர் இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள காப்புறுதியை பெற்றுக்கொள்ளுதல்.
போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைப்போம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image