சட்டத்திற்கு முரணாக ஆட்சேர்ப்பு - 106 கோடி ரூபாவை இழந்த மத்திய கலாசார நிதியம்
மத்திய கலாசார நிதியத்திற்கு சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்சேர்ப்பு செய்தமை காரணமாக சுமார் 106 கோடி ரூபா நிதி விரயம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2018, 2019ம் ஆம் காலப்பகுதியில் சுமார் 3000 ஊழியர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இணைத்துக்கொள்ளப்பட்டமையினால் இவ்வாறு நிதி விரயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரச நிறுவனத்திற்கு வேறு நிறுவனத்திற்காக ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான நிதி ஒதுக்கப்படாத நிலையில் குறித்த நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொல்லியல் திணைக்களத்திற்கு தொல்லியல் உதவியாளர்கள் (தொழிலாளர்கள்) 2271 பேர் மற்றும் காவற்காரர்கள் 1130 பேர் மத்திய கலாசார நிதியத்தின் நிருவாக சபை 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ம் திகதி இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியளவில் இணைத்துக்கொள்ளப்பட்ட முழு ஊழியர்களின் எண்ணிக்கை 1089 ஆகும். (உதவியாளர்கள் -713, காவற்காரர்கள் - 553)
அதனையடுத்து 2019ம் ஆண்டு செப்டெம்பர் 30ம் திகதியளவில் 1487 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். (உதவியாளர்கள் 934 மற்றும் காவற்காரர்கள் 376 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்)
தொடர்ந்து 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் 1415 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டு மத்திய கலாச்சார அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் நிர்வாகக் குழு அதன் தத்ய ஊழியர்களின் எண்ணிக்கையை வழங்கியது.
Lankadeepa