துன்புறுத்தல்கள், சித்திரவதைகளற்ற வேலையுலகை உருவாக்க C190 சமவாயத்தை அங்கீகரிப்போம்!

துன்புறுத்தல்கள், சித்திரவதைகளற்ற வேலையுலகை உருவாக்க C190 சமவாயத்தை அங்கீகரிப்போம்!

வேலை உலகில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித சர்வதேச உடன்படிக்கையும் இல்லாமை இந்த சமவாயத்திற்கு விசேட மதிப்பு கிடைப்பதற்கு பிரதான காரணமாகும்.

அவ்வாறெனின் வேலை உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் ஊடாக நபர் ஒருவரின் / பணியாளர் ஒருவரின் உடல், உள, பால்நிலை ஆரோக்கியம் மற்றும் சுயகௌரவம் முதலான விடயங்கள் மூலம் அவன் அல்லது அவளது பணி மற்றும் வாழ்க்கையிலும் சமூக சூழலிலும் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதற்கமைய பணியிடத்தில் முதலாளிமார் அதாவது சேவை வழங்குனர் இதனூடாக நேரடி அழுத்தம் ஏற்படும். அவ்வாறெனில் உழைப்பை வழங்குபவர்கள் உள மற்றும் உடல் ஆரோக்கியம் குறைவடையும் போது தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்களின் அணுகல் குறைவதுடன் உற்பத்தித் திறனும் குறைகின்றது.

தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் பணியிடத்தில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கான இயலுமை இருக்கின்ற போதிலும், அவ்வாறான துன்புறுத்தல்கள் குறைவதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்கு பெண் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்றனர். எனினும் இந்த சர்வதேச சமவாயம் பணியிடம் என்ற எல்லைக்கு அப்பாற் சென்று வேலை உலகம் வரையில் தொழிலாளர்களை பாதுகாக்கின்றது. அவ்வாறெனில் பணியிடத்தில் இருந்து தமது வீடு வரையான போக்குவரத்து சேவைக்காக, அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் சந்தர்ப்பத்தில், தொழிலுடன் தொடர்புடைய விநோத சுற்றுலாக்கள், பயிற்சித் திட்டங்கள் தொழில் தருனரால் வழங்கப்படுகின்ற தங்குமிடங்களில் இடம்பெறுகின்ற வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களில் பெண்கள் / ஆண்கள் இருதரப்பினரையும் பாதுகாக்கின்றது.

வேலை உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் மூலம் பிரஜை ஒருவரின் மனித உரிமை மீறப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நமது நாட்டில் உள்ள அதாவது அரசியலமைப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய எந்தவொரு பிரஜையும் ஆண்-பெண் பாலினம், மதம், சாதி, அரசியல் நிலைப்பாடு, பிறப்பிடம் என்பனவற்றின் அடிப்படையில் பாகுபாடாக நடத்தப்படக் கூடாது. இந்த அடிப்படை சட்டத்திற்கு அமைய ஆற்றப்படும் செயல்பாடு நிறைவேற்று அல்லது நிர்வாக செயற்பாடுகளின் மூலம் மீறப்படாத உரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறாக பணியாளர் ஒருவரின் உரிமை மீறப்பட்டால் அந்த உரிமை மீறப்பட்ட நாள் முதல் 30 நாட்களுக்குள் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும். எனினும் இந்த C190 சமவாயத்தின் மூலம் நபரொருவரினால், நபரொருவருக்கு செய்யப்படும் துன்புறுத்தல் அல்லது வன்முறை தொடர்பில் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

1995 இலக்கம் 22 தண்டனை சட்டக் கோவையின் (திருத்த) சட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு குற்றவியல் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடுத்து குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியாகும் தன்மையை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டும். விசேடமாக இதுபோன்ற வழக்குகளில் சட்டத்தரணிகளின் திறமையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சட்டரீதியான நிவாரணத்திற்கு பதிலாக அவர்களது உளவியல் சோர்வு அதிகரித்து தமது வழக்கை நிரூபிக்க முடியாமல் நியாயம் கிடைக்காமல் போகும்.

1950 இலக்கம் 45 தொழிலாளர் பிணக்குகள் சட்டத்தின் மூலம் ஒரு பணியாளருக்கும், தொழில்தருனருக்கும் இடையில் இடம்பெறும் தொழில் பிணக்கு சட்டத்தின் பிரகாரமும், பணியிடத்தில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தொழில் ஆணையாளர் நாயகம் விசாரணை மேற்கொண்டு அது தொடர்பில் முடிவொன்றை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்புக்கு அனுப்பி வைக்க முடியும். பாலியல் துன்புறுத்தல் காரணமாக எவராவது ஒரு பணியாளரின் தொழிலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டி ஏற்படுமாயின், அது குறித்து தொழிலாளர் தீர்ப்பாயத்தில் (Labour Tribunal) முறைப்பாடு செய்ய முடியும்.

இலங்கையில் மற்றுமொரு பலமான தொழிலாளர் சட்டமான தொழிலாளர் இழப்பீட்டு கட்டளை சட்டத்தின் மூலம் தொழிலாளர் ஒருவருக்கு வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் உடல்ரீதியான காயங்கள் அல்லது ஊனமுற்ற நிலைமை ஏற்படும் சந்தர்ப்பங்கள் தவிர, பணியாளரின் உளவியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைமுறையிலுள்ள சட்டத்தில் இல்லை. எனினும் C190 சமவாயத்தின் மூலம் இந்த அனைத்து நிலைமைகளும் உள்ளீர்க்கப்படுகின்றன.

இந்த C190 சர்வதேச சமவாயம் 12 சரத்துக்களை கொண்டுள்ள நிலையில், விசேடமான சரத்தாவது சட்ட அமுலாக்கல் மற்றும் தீர்வுகளை வழங்கும் பத்தாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் மூலம் ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.

அ) வேலை உலகில் இடம்பெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை கண்காணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.

ஆ) வேலை உலகில் இடம்பெறும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவங்கள் தொடர்பில் நியாயமான மற்றும் பயனுள்ள தீர்வுகள் மற்றும் தகராறு தீர்த்தல் பொறிமுறை மற்றும் செயற்பாடுகளுக்காக எளிதான அணுகலை உறுதி செய்தல்.

* முறைப்பாடு மற்றும் விசாரணை நடைமுறைகள் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் பணியிட மட்டத்தில் தகராறு தீர்க்கும் பொறிமுறை.

* பணியிடத்திற்கு அப்பால் தகராறு தீர்க்கும் பொறிமுறை.

* நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம்.

* முறைப்பாட்டாளர் பாதிக்கப்பட்டவர் சாட்சியாளர் மற்றும் தகவல்களை கண்டறியும் நபர் பழிவாங்கலுக்கு உட்படுதல் அல்லது பாதிக்கப்பட்டவராக ஆக்குதல் அல்லது பாதிக்கப்பட்டவராக ஆக்குவதில் இருந்து பாதுகாப்பு பெறல்.

* முறைப்பாட்டாளர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்ட, சமூக மற்றும் நிர்வாக ஆதரவு நடவடிக்கை.

மேலும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான தேசிய செயல் நடைமுறை, தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் மூலம் இந்த சமவாயத்தின் ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது தொடர்பில் தற்போது, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சட்டவாதிகள் இந்த சமவாயத்தின் தேசிய முக்கியத்துவத்தை அறிந்து பல்வேறு பேச்சுவார்த்தைகள், தெளிவுபடுத்தல் வேலைத்திட்டம், சமூக வலைத்தள பிரசாரம், கையேடுகளை வெளியிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி செயற்பாட்டு ரீதியான பாரிய முன்னெடுப்பை மேற்கொள்கின்றனர்.

மேலும் இது தொடர்பான சட்டத்தை தயாரிக்கும் பொறிமுறையை உருவாக்க தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அண்மையில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தன. இதன்போது இந்த சமவாயத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஊடாக பாதுகாக்கப்படும் அனைத்து பணியாளர்கள் துறை தொடர்பில் தீவிர ஆர்வத்தையும், அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான முழுமையான ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மனிதருக்கும் வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து விடுபடுவதற்கான மனித உரிமை மீறப்படுவதற்கு இடமளிக்காது, நாட்டின் அதிஉச்ச சட்டமான அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாடாக உலக தொழிலாளர் தாபனத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள C190 சமவாயத்தை விரைவாக அங்கீகரித்து, அனைத்து பணியாளர்களினதும் தொழில் உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம்! குரல் கொடுப்போம்! கோரிக்கை விடுப்போம்! அவ்வாறாக C190 சமவாயத்தை அங்கீகரித்த முதலாவது தெற்காசிய நாடாக திகழ்வோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image