அன்றாட வாழ்க்கையில் பெண்கள் இரையாகும் குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டங்கள்
குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் ஆண் பெண் இருபாலாருக்கும் சமமாக பொருந்துவதுடன், பெண்களுக்காக விசேடமாக குறிப்பிடப்பட்ட பல சட்டங்கள் எமது நாட்டின் சட்டத்தில் உள்ளன.
அவையாவன,
01. கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பினால் மரணம் ஏற்படுதல்.
02. எதிர்பாராத தருணத்தில் பெண்ணொருவரை தொட்டு பலவந்தமாகப்படுத்த முயற்சி செய்தல்
03. பாலியல் துன்புறுத்தல்.
04. பெண்கள் துஷ்பிரயோகம்.
05. பாலியல் துஷ்பிரயோகம்
06. வீட்டு கட்டமைப்புக்குள் இடம்பெறும் வன்முறைகள்
குற்றமாக கருதப்படும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரின் பெயர் மற்றும் பிற தகவல்களை வெளிப்படுத்துவது தடையாகும்.
மேலும் இதன்போது 1995 இலக்கம் 2 தண்டனை சட்டக் கோவையின் திருத்தங்களுக்கு அமைய, பெண்கள் துஷ்பிரயோகம் பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளமை இந்த திருத்தத்தின் விசேட அம்சமாகும்.
01. கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பினால் மரணம் ஏற்படல்.
குற்றவியல் சட்டத்தின் 303 முதல் 305 வரையான சரத்துக்களில், கர்ப்பம்தரித்த பெண்ணொருவர் தனது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தார்மீகமற்று செய்யப்படும் கருக்கலைப்பு அல்லாத கருக்கலைப்பு குற்றவியல் குற்றமாகும்.
அவ்வாறான கருக்கலைப்பு பெண்ணின் விருப்பமின்றி செய்யப்படுவது, அத்துடன் கருக்கலைப்பின் போது அவ்வாறான பெண்ணுக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயற்பாடானது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்குரிய குற்றமாகும்.
02. எதிர்பாராத தருணத்தில் பெண்ணொருவரை தொட்டு பலவந்தமாகப்படுத்த முயற்சி செய்தல்
தண்டனை சட்டக் கோவையின் 345 தரத்திற்கு அமைய பெண்ணொருவரின் உடலைத் தொடுதல் அல்லது கையால் பிடிப்பது கூட குற்றவியல் குற்றமாகும். இந்தக் குற்றத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் அபராதமும் இவற்றுக்கு மேலதிகமாக இழப்பீடும் வழங்க வேண்டும்
03. பெண்கள் துஷ்பிரயோகம்
பெண்ணொருவரின் விருப்பமின்றி அல்லது மயக்கத்தில் இருக்கின்ற போது அவரை அச்சுறுத்தி அல்லது வஞ்சகமான முறையில் அவரின் விருப்பத்தை பெற்று அவருடன் உடலுறவில் ஈடுபடுவது துஷ்பிரயோகக் கருதப்படுகிறது. பெண் ஒருவர் 16 வயதிற்கு குறைந்தவராயின், அவரின் விருப்பத்துடன் செய்யப்படும் இதுபோன்ற செயற்பாடுகள் பெண் துஷ்பிரயேகமாக கருதப்படும். இவ்வாறான குறறத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் ஒருவர 20 ஆண்டுகளுக்கு அதிகமான கடூழிய சிறை தண்டனையும், அபராதமும் மற்றும் இழப்பீட்டையும் வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.
04. துஷ்பிரயோகம்
தமது குடும்பத்தின் மிகவும் நெருங்கிய உறவினரான இரத்த உறவுகள் போன்ற பெண் அல்லது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபடுவது துஷ்பிரயோகம் என அழைக்கப்படும். இந்தக் குற்றத்தில் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத 20 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறை தண்டனையும் அபராதமும் மற்றும் இழப்பீடும் செலுத்த வேண்டி ஏற்படும்.
05. பாலியல் சீண்டல்கள்
ஆணையோ அல்லது பெண்ணேயோ அல்லது 18 வயதுக்குக் குறைந்த எவரையும் பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தல், ஆபாசமாக காண்பித்தல் அல்லது காட்சிகளுக்காக பங்கேற்கச் செய்தல் என்பன பாரிய குற்றமாகும்.
பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?
குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பவர் குற்றவியல் சட்டத்தின் ஏதாவது ஒரு செயல்பாடு அல்லது தவறுதல், மீறுவதலினால் ஒருவரது உடல், உள காயங்கள் ஏற்பட, மன உளைச்சல், நிதி இழப்பு அல்லது அடிப்படை உரிமை மீறல் உள்ளிட்ட துன்பங்களுக்கு நபர் ஒருவர் அல்லது கூட்டாக பாதிக்கப்பட்டவர்களாக குறிப்பிட முடியும். இதன்போது குற்றத்தில் நேரடியாக பாதிக்கப்படுவோர் மட்டுமல்லாது அவருடன் நெருங்கிய உறவினர்கள், அவர்களை நம்பி வாழ்வோர் வழக்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க முன்வரும் சாட்சியாளர்கள் போன்ற மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.
குற்றவியல் சட்டத்தில் குற்றம் மற்றும் தண்டனை உள்ளடங்கிய குற்றவியல் தண்டணை சட்டக் கோவையின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் அல்லது தவறு சிலவற்றை செய்யும் நபரை குற்றவாளியாக அடையாளப்படுத்தலாம். குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதற்கு பொலிசார் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சட்ட முறைமையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது.
குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய வழக்கு விசாரணை முறைமைக்கு அமைய முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள்.
01. வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவர் என்று கருதப்படுவார். இது குற்றம் சுமத்தப்பட்டவருக்கு பயணளிக கும் நிலையாகும்.
02. நியாயமான சந்தேகம் எழுந்தால் அதன் நன்மை குற்றம் சாட்டப்பட்டவருக்கு கிடைக்கும்.
03. குற்றவாளி ஒருவர் குற்றத்திலிருந்து விடுபட்டாலும், நிரபராதி ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது என்ற கருத்து உள்ளது.
04. சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள தாமதங்களால், பாதிக்கப்பட்டவர் முகங்கொடுக்கக்கூடிய அவமானங்கள் அதிகமாகும்.
குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்.
01. நீதிமன்றம் காவல்துறை போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பணிவுடன் கவுரவமாக நியாயமாக நடத்தப்படும் உரிமை.
02. வழக்கு திகதி, வழக்கு நடவடிக்கைகளில் இடம்பெறும் விடயங்களுடன் தொடர்புடைய தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை.
03. வழக்கு விசாரணைக்கு முன்னரும் விசாரணைக்கு பின்னரும் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பிற்கான உரிமை.
04. சட்டத்தரணியின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கும், நீதிமன்றம், பொலிஸ் போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில், சட்டத்தரணி ஊடாக பிரதிநிதித்துவம் செய்வதற்கான உரிமை.
05. தமது முறைப்பாடு மற்றும் வழக்கு நடவடிக்கைகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தி கொள்வதற்கான உரிமை.
06. இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் உரிமை.
07. பிணை கோரிக்கைகளின்போது தமது பாதுகாப்புக்கு இருக்கின்ற அச்சுறுத்தல் போன்ற விடயங்களை கவனத்திற்கொண்டு குற்றத்தால் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
08. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாதல், தண்டனை, விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளும் உரிமை.
09. ஆலோசனைக்கான உரிமை