தொழிற்சங்க செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உண்டா?

தொழிற்சங்க செயற்பாடுகளை  கட்டுப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உண்டா?

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியுள்ள விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவுள்ளோம்.

அண்மைக்காலமாக உரிமைக் கோரி நடத்தப்படும் தொழிற்சங்க போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலகங்கள், கூட்டங்கள் என்பவற்றை பலவந்தமாக கலைக்கப்படுவதுடன் அவற்றில் பங்குபற்றுபவர்களையும் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்றன.

 இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மேற்குறித்த விடயங்கள் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் நாம் அறிந்துகொள்வது மிக அவசியம்.

 கேள்வி - 1
இலங்கையில் தொழிற்சங்க உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை பலவந்தமாக கலைப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்குள்ள சட்ட அதிகாரங்கள் யாவை?

பதில் - 1

தொழிற்சங்க அங்கத்தினர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. கூட்டங்கள் நடத்துவது என்பது தொழிற்சங்கங்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எனினும் அவற்றை நடத்தப்படும் விதங்களில் சட்டவிரோதமான கூட்டங்களிலும் அமைதியாக நடத்தப்படும் கூட்டங்களிலும் அவ்வுரிமைகள் மறுக்கப்படும் நிலை தற்போது தோன்றியுள்ளது.

கூட்டங்களை நடத்துவதற்கான உரிமை இலங்கை அரசியலமைப்பின் 14 அரசியலமைபின் உப அரசியலமைப்பாக விளக்கப்பட்டுள்ளது.

 14 (1) அனைத்து குடிமக்களுக்கும்

 (அ) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்

(ஆ) அமைதியான கூட்டங்கள்

(இ) நிறுவன சுதந்திரம்

(ஈ) தொழிற்சங்கங்களை அமைத்தல் மற்றும் தொழிற்சங்கங்களில் இணையும் சுதந்திரம்

அதற்கமைய, எந்தவொரு ஊர்வலம், கூட்டம், போராட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு அரசியலமைப்பின் 12 1 (அ) மற்றும் 14 1 (ஆ) ஆகிய உப அரசியலமைப்புகளுக்கமைய, தொழிற்சங்க உரிமைகளை செயற்படுத்துவதற்கு முக்கிய காரணமின்றி கூட்டங்களை நடத்த விடாமல் தடுக்க அதிகாரமில்லை. செயற்பாட்டாளர்கள் வீதிகளை தடுத்து கற்கள் போன்றவற்றால் தாக்குதல் நடத்து வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கலைத்து விரட்டுவதற்கு அரசியலமைப்பின் 15 (07) உப அரசியலமைப்பில் பொது பாதுகாப்பு, நாட்டின் இயல்புத்தன்மை பாதிக்கப்படாமல் பொது சுகாதாரம், விழுமியங்கள் என்பவற்றை பாதுகாக்கும் வகையில் ஏனையோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் உரிய வகையில் ஏற்றுக்கொள்வதாகவும் மதித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

கேள்வி - 2

பொது மக்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையான பொலிஸார் கைது செய்வதானது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மற்றும் மனித உரிமை மீறப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றனவா?

பதில் - 2

நாட்டின் குடிமகனின் அடிப்படை உரிமை தொடர்பான சட்டமானது அரசியலமைப்பின் 3ம் பிரிவிலும் மனித உரிமை என்பதன் விரிவான விளக்கம் ஐநா மனித உரிமைகள் தொடர்பான ஆவணத்தின் 12வது பிரிவிலும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எந்தவொரு குடிமகனினதும் தனியுரிமை, நியாயமான காரணங்களுக்காக அன்றி தடை செய்யக்கூடாது. மேலும் சட்டரீதியாகவன்றி கைது செய்தல், தடுத்து வைக்கப்படாதிருக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அது மட்டுமன்றி, அரசியலமைப்பின் 13 (01) உப பிரிவில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவன்றி கைது செய்ய முடியாது. யாராவது ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக கைது செய்யப்படுவாராயின் அவருக்கு அக்காரணத்தை தௌிவுபடுத்துவது அவசியம். அதற்கமைய கைது செய்யப்டப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனது சுதந்திரம் ஏன் இல்லாமலாக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை உண்டு. கைது செய்வதற்கான உத்தரவுடன் அல்லது இல்லாமல் இடம்பெறக்கூடும். எனினும் பொலிஸ் அதிகாரி யாராவது ஒரு சந்தேகநபரை சந்தேகத்தின் பேரில் மாத்திரம் கைது செய்யப்படுவாராக இருந்தால் , அந்த கைதானது சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பின் அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி - 3

ஒருவர் கைது செய்யப்பட்ட ஒருவரை எவ்வளவு காலம் பொலிஸ் காவலில் வைத்திருக்க முடியும்?

பதில் - 2

 கைது செய்யப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றில் வைத்திருக்க சமர்ப்பிக்கப்படவேண்டும். குற்றவியல் விசாரணை சட்டத்திற்கமைய நீதிபதி முன்னாள் நிறுத்துவதற்கு அழைத்து வருவதில் ஏற்படும் தாமதத்திற்கு மாத்திரமே இவ்வாறு 24 மணி நேரத்தை விடவும் அதிக நேரம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் குற்றவியல் விசாரணை சட்ட வரைபில் திருத்தப்பட்ட சட்டத்திற்கமைய சந்தேகநபரை தடுத்து வைத்துக்கொள்வதற்கான ஆகக்கூடிய காலம் 48 மணி நேரமாக அதிகரிக்க முடியும். அத்துடன் 1978 48ம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கமைய 73 மணி நேரம் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image