அரச அதிகாரியின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றபோது இருக்கின்ற சட்டரீதியான பரிகாரம்!

அரச அதிகாரியின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றபோது  இருக்கின்ற சட்டரீதியான பரிகாரம்!

அரச அதிகாரிகளின் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டரீதியான பரிகாரங்கள் என்ன என்பது தொடர்பான கருத்தியலை உங்களுக்கு வழங்குவதற்கு இம்முறை 'வேலைத்தளம்' சட்ட பக்கத்தின் ஊடாக தீர்மானித்து இருக்கின்றோம். நீங்கள் அரச ஊழியராயின் உங்களது அறிவுக்கு இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

கேள்வி: 1

பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது சந்தர்ப்பங்களில் இருக்கின்ற சட்ட ரீதியான பரிகாரம் என்ன?

பதில்: 1

பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமை ஏதாவது நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக மீறப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது மீறப்படுவதற்கு அண்மித்த சந்தர்ப்பத்தில் உள்ளமை தொடர்பில் அரசியலமைப்பின் 126ஆம் சரத்தின்கீழ் உயர் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய முடியும்.

அடிப்படை உரிமை மீறப்பட்ட 30 நாட்களுக்குள் அவ்வாறான மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

அடிப்படை உரிமை மீறலுக்கு உட்பட்ட நபராலோ அல்லது அவர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ஊடாகவோ அமுலிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய எழுத்துமூலமான மனு ஒன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்ய முடியும்.

கேள்வி: 2

பாராளுமன்ற ஆணையாளர் என்ற ஒம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) என்பவர் யார்?

பதில்:2

1981 இலக்கம் 17 பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர் என்ற பதவி தொடர்பிலானதாகும். இதன்மூலம் அரச அதிகாரி மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகளினால் இடம்பெறும் அடிப்படை உரிமை மீறல் மற்றும் வேறு அநீதியான நடவடிக்கைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடு அல்லது குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பது ஒம்புட்ஸ்மனின் அதிகார கடமை மற்றும் பொறுப்புமாகும்.

கேள்வி:3

மனித உரிமைகள் ஆணைக்குழு என்றால் என்ன அதன் வகிபாகம் என்ன?

பதில்:3

1973 33 ஆம் இலக்க சட்டத்தின்கீழ், ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதன்மை நோக்கமானது, மனித உரிமைகளை பாதுகாப்பதாகும். விசேட அக்கறைகள் அல்லது பாகுபாடுகளை கலைதல் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிப்பாய்வு செய்யும் ஆணைக்குழுவாக இதனைக் குறிப்பிடமுடியும்.

மேலும் அரசியலமைப்பின் 12 (2) சரத்தின்கீழ், நபர் ஒருவரின் இனம், மதம், மொழி, குலம், பாலினம், அரசியல் நிலைப்பாடு, பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சத்திற்கு அல்லது விஷேட கவனத்திற்கு உள்ளாகாமல், சர்வ நீதிக்கான உரிமையை பாதுகாக்க இந்த மனித உரிமைகள் ஆணைக்குழு கடப்பாடுடையது.

கேள்வி:4

உரிமை மீறப்பட்ட ஒருவர் இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கான நடைமுறை என்ன?

பதில்:4

ஏதாவது பாரபட்சத்துக்கு உள்ளானமையால், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் ஒருவர், அந்த உரிமை மீறல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குள் ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்ய வேண்டும்.

அந்த முறைப்பாட்டில் தமது அடிப்படை உரிமை மீறப்பட்ட காலம் மற்றும் அதன் அனைத்து விபரங்களும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

மேலும் முறைப்பாட்டாளரின் முறைப்பாடு நியாயமானது என ஆணைக்குழு கண்டறிந்தால், முறைப்பாடு கிடைக்கப்பெற்று 6 மாத காலத்திற்குள் அனைத்து தரப்பினரையும் அழைத்து, அது குறித்து கலந்துரையாடல், தீர்வு பெற்றுக்கொடுத்தல், மத்தியஸ்தம் செய்தல் அல்லது அது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குதல்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த தரப்பினர் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image