அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் சென் அண்டோனியோ பிரதேசத்தில் கைவிடப்பட்ட லொரியில் 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்கள் அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா - மெக்ஸிக்கோ எல்லையில் இருந்து சுமார் 250 கிமீ தூரத்தில் சென் அண்டோனியோ பிரதேசம் காணப்படுவதாகவும், இப்பகுதி மனிதக் கடத்தல்காரர்கள் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான பாதையாக காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆட்கடத்தற்காரர்கள், அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தொலைதூரப் பகுதிகளில் அவர்களைச் சந்தித்த பிறகு, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல அடிக்கடி லாரிகளைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை வழங்க இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இது ஒரு மிகப் பயங்கரமான விடயம் என்றும் சென் அண்டோனியோ நகர ஆளுநர் ரொன் நீரென்பர்க் தெரிவித்துள்ளார்.