ஜோர்தானில் இரசாயன வாயுக்கசிவினால்13 பேர் பலி!

ஜோர்தானில் இரசாயன வாயுக்கசிவினால்13 பேர் பலி!

ஜோர்தானில் செங்கடல் துறைமுகத்தில் ஏற்பட்ட குளோரின் இரசாயன வாயு கசிவினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 260 பேர் வரை காயடடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இரசாயனவாயு சேகரித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனை இடம்மாற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட பாரதூக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

சிசிடிவி கமராவில் குறித்த விபத்து பதிவாகியுள்ளதாகவும் மேலே தூக்கப்பட்ட குறித்த கொள்கலன் மீண்டும் கப்பலில் விழுந்து வெடிப்பது பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (27) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 123 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image