ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சுமார் 1,000 பேர் பலியாகியுள்ளனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து. 44 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இந்த நில நடுக்கம் இடம்பெற்றுள்ளது.
5.9 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கத்தில் பதிவாகியுள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.