டில்லி கட்டிடத் தீவிபத்தில் 27 பேர் பலி!

டில்லி கட்டிடத் தீவிபத்தில் 27 பேர் பலி!

இந்தியத் தலைநகர் டெல்லியின் முண்ட்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 27 பேர் இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

டெல்லியின் புறநகர் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சமீர் சர்மா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

கட்டிடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கூடுதல் துணை ஆணையர் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவித்தார்.

டெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி, "இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், 14 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது," என்று கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image