சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு கரீபியின் தீவுக் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஹெயிட்டி நாட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கரீபியன் தீவுநாடுகளான ஹெயிட்டி மற்றும் டொமினிகன் குடியரசில் வன்முறைகளும் வறுமையும் தலைவிரித்தாடும் நிலையில் உள்நாட்டு மக்கள் வாழ்வாதாரம் நாடி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே அவர்கள் உயிராபத்துக்களையும் கருதாது ஆபத்தான முறைகளில் குடிபெயர முயன்று வருகின்றனர். அவ்வாறு சென்றே படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
போர்ட்டோ ரிகோ தீவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடற்பாதுகாப்புப் படைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 31 மீட்கப்பட்டுள்ளனர். எனினும் பெண்கள் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.