பெண்களுக்கு மாதத்திற்கு மூன்று நாள் மருத்துவ விடுமுறை - ஸ்பெயின் ஆராய்வு
கடுமையான மாதவிலக்கு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு மருத்துவ விடுப்பை அறிமுகப்படுத்த ஸ்பெயின் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உத்தேச சட்ட வரைவில் மாதத்திற்கு 3 நாட்கள் வரை விடுமுறை வழங்கவும் அதனை அதனை 5 நாட்களாக நீடிக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்பெயின் ஊடகங்களுக்கு கசிந்த இந்த வரைவு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பாவில் இதுவே முதல் சட்டப்பூர்வ உரிமையாக இருக்கும். உலகெங்கிலும் ஒரு சில நாடுகளில் மட்டுமே இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.
ஸ்பெயினின் சட்டம், நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்களில் மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த இனப்பெருக்க சுகாதார சீர்திருத்தத்தினைக் கொண்ட நாடாக உள்ளது.
குறித்த வரைபின் சில பகுதிகளைப் பார்த்த ஊடகங்கள், அடுத்த வார தொடக்கத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.