ஈராக்கில் ஒக்சிஜன் தாங்கி வெடிப்பு- 27 பேர் பலி

ஈராக்கில் ஒக்சிஜன் தாங்கி வெடிப்பு- 27 பேர் பலி

நேற்று (25) பக்தாத் நகரில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 காயமடைந்துள்ளனர்.

ஒக்சிஜன் தாங்கி வெடிப்பினால் தீயின் காரணமாக இவ்வுயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

பக்தாத்தில் உள்ள இபின் அல் காடிப் மருத்துவமனையில் நுழையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான யுத்தம், மற்றும் பல்வேறு காரணங்களினால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈராக் சுகாதார முறை கொரோனா காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts