கொரோனா இரண்டாம் அலை தீவிரம்- டில்லியை முடக்க தீர்மானம்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம்- டில்லியை முடக்க தீர்மானம்

இந்தியத் தலைநகர் டில்லியில் ஒரு வார காலம் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இம்முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கெரொன இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக 25,000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தட்டுப்பாடு முழுமையான முடக்கல் நிலை அமுல்படுத்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

, இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் கிழமை காலை 5 மணிவரை 6 நாட்களுக்கு முழு ஊரடங்கை டெல்லியில் அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், உணவு, மருத்துவ சேவைகள் தொடர்ந்து இயங்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமணத்துக்கான தனியாக அனுமதி வழங்கப்படும். இதற்கான முறையான விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image