தென் கொரியாவில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை

தென் கொரியாவில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை

தென் கொரியாவில் தடுப்பூசிகளுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

AstraZeneca தடுப்பு மருந்தில் 10 வீதத்திற்கும் குறைவாக எஞ்சியிருப்பதனால் பற்றாக்குறை ஏற்படும் என்று அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர்

அதனால் தடுப்பூசி போடும் திட்டத்தில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது

தென் கொரியா இதுவரை 2 மில்லியன் AstraZeneca தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளது. 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

கூடுதல் மருந்து வந்து சேராவிட்டால், மீதமுள்ள தடுப்பூசிகள் இரண்டு நாள்களுக்குள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியத் தடுப்பூசித் திட்டத்தின் முதற்கட்டமாக, தாதிமை இல்லவாசிகளுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் AstraZeneca தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அரிதான ரத்தக் கட்டிகள் ஏற்படும் அபாயத்தால், 30 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்படுவதில்லை.

Author’s Posts