ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெப்ப அலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியங்கள் உள்ளதாக ஐரோப்பா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதிலும் கடும் காற்று காரணமாக பெரும் சிரமமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன.