லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைப்பு

லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைப்பு

லிபிய பாராளுமன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியான மின்துண்டிப்பு மற்றும் அத்தியவசிய பொருட்களின் கட்டுப்பாடின்றி அதிகரித்தமை போன்றவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ்வாறு டுப்ரூக் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீயிடப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

தற்போது இப்போராட்டம் லிபியாவின் ட்ரிப்போலி நகரிலும் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடியாக தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் பிரதானி இவ்வார்ப்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்றும் சர்வதேச தகவல்கள் வௌியாகியுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image