சம்பளம், தொழில், நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கும் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பிரித்தானிய ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பிரித்தானிய ரயில்வே தொழிற்சங்கங்கள் தமது சம்பளத்தை 7 வீதத்தினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இச்சம்பள அதிகரிப்பானது அந்நாட்டு அந்நாட்டு பணவீக்க அதிகரிப்பினை விடவும் குறைவானபோதும் தொழில் வழங்குநர்களின் முன்மொழிவை விடவும் அதிகமாக உள்ளமையினால் பிரச்சினை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தொழில்நுட்ப ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டமானது 3vதசாப்தங்களுக்குப் பிறகு இடம்பெற்ற பாரிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமாக கருதப்படுகிறது.
நெட்வேர் ரயில் மற்றும் தனியார் ரயில் நிறுவனங்களின் புதிய கொடுப்பனவுகளை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ரயில்வே தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் மிக் லின்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கிராண்ட் ஷெப்ஸ் பொதுப்போக்குவரத்து சேவைக்கான பில்லியன் கணக்கான பவுன்ஸ் நிதியை குறைத்துள்ளார்
என்று குற்றஞ்சாட்டியுள்ள தொழிற்சங்கச் செயலாளர் ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புக்களை இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.