அல் -ஜசீரா செய்தியாளர் செய்தி சேகரிப்பின் போது கொல்லப்பட்டார்!

அல் -ஜசீரா செய்தியாளர் செய்தி சேகரிப்பின் போது கொல்லப்பட்டார்!

Al Jazeera செய்தி நிறுவனத்தின் மூத்த பெண் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே (Shireen Abu Aqleh), பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனக் கிறிஸ்துவரான அவர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல் குறித்துச் செய்தி சேகரிக்கும்போது கொல்லப்பட்டார்.

கட்டாரை தளமாக கொண்டு இயங்கும் இயங்கும் அல்ஜசீரா செய்தி நிறுவனம், தமது செய்தியாளரான 51 வயது அபு அக்லே இஸ்ரேலியப் படையினரால் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 குறித்த ஊடகவியலாளரின் மரணம் தொடர்பில் சுயாதீனமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை முன்னெடுக்கபடவேண்டும் என்று ஐநா சபை செயலாளர் நாயகம் அண்டோனியோ குடரெஸ் நேற்று (11) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image