வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் கோரிக்கை நிராகரிப்பு

வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் கோரிக்கை நிராகரிப்பு

வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்து தண்டனை வழங்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணின் மேன்முறையீட்டுக் கோரிக்கையை சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தனது வீட்டில் பணியாற்றிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண்ணை (குமாரி பியாங் காய் டோன்) கொலை செய்ததாக நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்திய வம்சாவளிப் பெண்ணான காயத்ரி (42) என்பவருக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மென்முறையீடு செய்வதற்கான புதிய தடயங்களாக அந்த ஆவணங்கள் தேவை என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையே நிராகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஆவணங்களை வெளியிடும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் ஆவணங்களை வெளியிட உத்தரவிடுவதற்கு எந்த தேவையும் இல்லை என்று மூன்று நீதிபதிகள் கொண்ட குழு கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

காயித்திரி தமது வழக்கில் சிங்கப்பூர் சிறைத் துறை தனக்கும் தன் தாயாருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, அது குறித்த மருத்துவ ஆவணங்களைக் கோரியிருந்தார்.

சிங்கப்பூர் சிறைத் துறை இருவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாகக் கூறி அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

மேலும் அவர் சிறையில் தான் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறியதுடன் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் சிங்கபபூர் சிறைத் துறை அந்தச் சம்பவங்கள் சரிவர விசாரிக்கப்பட்டு தக்க தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் சிறையில் இடம்பெறவில்லை என்றும் சிங்கப்பூர் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மரணமுற்ற குமாரி பியாங்கின் குடும்பத்தாருக்கும் தமக்கும் இடையிலான வாட்ஸ்ஆப் செய்திகள் தமக்கு வேண்டும் என்றும் குமாரி பியாங்கின் குடும்பம் தன்னை மன்னித்து விட்டதாக அவை காட்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் சிறைத் துறையைத் தவிர தமது முன்னாள் வழக்கறிஞர், அரசாங்க வழக்கறிஞர்கள் ஆகியவர்களுக்கு எதிராகவும் காயத்திரி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image