இரு வருடங்களின் பின்னர் எல்லைகளை திறந்த மேற்கு அவுஸ்திரேலியா

இரு வருடங்களின் பின்னர் எல்லைகளை திறந்த மேற்கு அவுஸ்திரேலியா

கடந்த இரு வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்கு அவுஸ்திரேலியா எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொவிட் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதேச எல்லைகளை வௌிநாட்டவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி சர்வதேச பயணிகளுக்காக எல்லைகள் திறந்து நான்கு மாதங்களின் பின்னரே மேற்கு ஐரோப்பா அதன் எல்லைகளை திறந்துள்ளது.

தமது பிராந்தியத்திற்குள் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இத்தீர்மானம் அவசியம் என்று கருதிய மேற்கு அவுஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது. எனினும் இத்தீர்மானமானது ஒரே நாட்டுக்குள் உள்ள குடும்பங்களை பிரிக்கும் தீர்மானம் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்மாநில ஆட்சியாளர் மார்க் மெகோவனுடைய இந்த கடுமையான கொள்கைக்காக மேற்கு அவுஸ்திரேலியா "துறவி இராச்சியம்" என்று அழைக்கப்பட்டது. கடந்த மாதம் அவுஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் உரிமையாளர் ஆட்சியாளர் மார்க் மெகோவனை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உனுடன் ஒப்பிடப்பட்டார். பின்னர் அதற்கு மன்னிப்புக் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image