மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பஹ்ரைன் பெண்ணொருவரும் சில ஆசிய ஆண்களும் பஹ்ரைன் ஆட்கடத்தல் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு துப்புறவு சேவை அலுவலகங்களுக்கு சொந்தமான குறித்த பஹ்ரைன் பெண் சில ஆசிய ஆண்களின் உதவியுடன் ஆப்பிரிக்காவில் இருந்து பெண்களை வீட்டுப்பணிக்காக கடத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணிடம் பணியாற்றிய இரு பெண்கள் தப்பிச் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இந்த ஆட்கடத்தல் நடவடிக்கை பொலிஸார் கவனத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு பஹ்ரைனுக்கு கடத்தப்படும் பெண்கள் வீட்டுப்பணிக்காக மணித்தியால வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர்களுக்கு குறித்த பெண்ணே மாத சம்பளம் வழங்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதற்கு உதவியாக செயற்பட்ட ஆசிய பிரஜைகள் மற்றும் 29 வீட்டுப்பணிப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஆட்கடத்தல் தொடர்பில் அறிவிக்க பஹ்ரைன் ஆட்கடத்தல் தடுப்பு தலைமையகம் 555 ஹொட்லைன் இலக்கத்தை அறிவித்துள்ளது.
மனிதக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பஹ்ரைன் விசேட பிரிவை கடந்த ஆண்டு நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.