உலகை அச்சுறுத்தும் மற்றொரு கொடிய வைரஸ்

உலகை அச்சுறுத்தும் மற்றொரு கொடிய வைரஸ்

உலகம் முழுவதும் கொவிட் 19 பரவலினால் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மற்றொரு கொடிய வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.

கொடிய இபோலா வைரஸ் இனத்தை சார்ந்த 'மாபர்க்' என்ற வைரஸ் ஆப்பிரிக்க நாடான கினியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 2ம் திகதி சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கினியா நாட்டவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அதில் 'மாபர்க்' வைரஸ் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களுக்கு 88 வீதம் மரணம் நிச்சயம். வௌவால், குரங்கு என்பவற்றில் இருந்து மனிதருக்கு பரவுகிறது.. மனிதனில் இருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இரத்தம், சளி, திசுக்கள் போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவும் சாத்தயம் காணப்படுகிறது.

வைரஸ் தொற்றுக்குள்ளாகி 2 -21 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் வௌியாகும். கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி என்பன நோய் அறிகுறியாகும். தொற்றுக்குள்ளாகி 5வது நாள் ஈறுகள் உட்பட பலவிடங்களில் இரத்தக் கசிவு ஏற்படுவதுடன் 7வது நாள் அழுத்தத்தின் காரணமாக நோயாளி இறந்து விடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image