ஆட்கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள்!

ஆட்கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள்!

ஆப்பிரிக்க கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் வீசியெறியப்பட்ட 80 சட்டவிரோக குடியேற்றவாசிகளில 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.

யேமனின் ஜிபோட்டியிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெரும் நோக்கில் படகில் பயணித்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கான கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய பணிப்பாளர் மொஹம்மட் அப்டிகெர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் பிராந்திய பேச்சாளர் இவோன் நெடஜ் கருத்து வௌியிடுகையில் ஒயிலேபி மற்றும் ஜிபோட்டி ஆகிய பிரதேசங்களில் இருந்து சிறுவர்கள் உட்பட 200 புலம்பெயர் பயணிகளுடன் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 2.00 மணிக்கு படகு புறப்பட்டுள்ளது. 30 நிமிட பயணத்தின் பின்னர் படகில் பயணிகள் எண்ணிக்கை அதிகமென ஆட்கடத்தல்கார்கள் சத்தமிட்டதுடன் ஆட்களை கடலில் தூக்கியெறிந்துள்ளனர்.

இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காப்பாற்றப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ச்சியாக போலியான ஆசைகளை காட்டி வறிய மக்களை ஏமாற்றி சுரண்டி வருகின்றனர். கடத்தல்காரர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும். மேலும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை மக்கள் பாதுகாப்பான, சட்டபூர்வமான மற்றும் கண்ணியமான முறையில் தொடர அனுமதிக்கும் வகையில் புலம்பெயர்வுக்கான புதிய பாதைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்று புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஜிபோட்டிக்கான சிரேஷ்ட பணிப்பாளர் ஸ்டெப்னி டேவியட் சுட்டிக்காட்டியுள்ளார்.

euronews

Author’s Posts