ஓமானில் உள்ள பயண முகவர்கள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து ஓமானுக்குப் செல்ல விரும்பும் பயணிகளுக்கான 15 நாள் விசேட போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்பொதியை பயன்படுத்தி இந்தியாவில் வசிப்பவர்கள் மற்றும் தொழில் புரிவோர் மீள ஓமான் திரும்ப முடியும்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் வசித்த பயணிகள் ஓமான் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே தற்போது அறிமுகப்படுத்தியுள்ள 14 நாட்கள் விசேட பயணத்திட்டத்தினூடாக மக்கள் அந்நிலைமையை சமாளித்து மீள ஓமான் திரும்ப வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று பயண முகவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்புதி பயணத்திட்டமானது 290 ஓமான் ரியாலில் இருந்து ஆரம்பமாகிறது. இதில் 15 நாட்கள் மாலைதீவு ஹோட்டலில் தங்குவதற்கான வசதி, ஹோட்டலிலேயே பிசிஆர் வசதி மற்றும் ஹோட்டலில் இருந்து நேரடியாக விமானநிலையத்திற்கு பயணிக்கும் வசதி மற்றும் மூவேளை உணவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாலைதீவை சென்றடைந்தவுடன் அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்படப்போவதில்லை என்றும் சுதந்திரமாக வௌியே நடமாடலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.