What Are You Looking For?

Popular Tags

டுபாய் துறைமுகத்தில் வெடிப்பு

டுபாய் துறைமுகத்தில் வெடிப்பு

மத்திய கிழக்கின் மிகப் பெரிய போக்குவரத்து மத்திய நிலையமான டுபாய் ஜெபெல் அலி துறைமுகத்தில் கப்பலொன்றில் இடம்பெற்ற வெடிப்பையடுத்து தீ பரவியுள்ளதாக அந்நாட்டு செ்யதிகள் தெரிவிக்கின்றன.

துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலொன்றில் இருந்த கொள்கலன் ஒன்றில் இவ்வெடிப்பு ஏற்பட்டதையடுத்து தீப்பற்றியெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வெடிப்பின் போது சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு சத்தம் கேட்டதாகவும் சில கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது மத்திய கிழக்கு பிரதேசங்களில் கடுமையான வெப்பம் நிலவுவதனால் இவ்வெடிப்பு இடம் பெற்றிருக்கலாம் என்றும் இவ்வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image