தென் பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
தென் தீவான மிண்டானோவில் இருந்து ஜோலோ நகரிற்கு 90 இற்கும் அதினமானோருடன் பயணித்த லொக்ஹீட் சி-130 ஹெகிலெஸ் என்ற குறித்த இராணுவ விமானம், நேற்று முற்பகல் விபத்துக்குள்ளானது.
இதில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன், 5 பேர் காணாமல்போயுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள், அருகில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்து விலகியமையே விபத்துக்கான காரணமாகும் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆயுதப் படைகளிலன் பிரதானி, ஜெனரல் சொபேஜனா தெரிவித்துள்ளார்.
குறித்த விமானம் மீண்டும் ஓடுபாதையை அடைய முன்னெடுக்கப்பட்ட முயற்சி பயனளித்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.