வெப்பநிலை கூடிய நாடாக குவைத்!

வெப்பநிலை கூடிய நாடாக குவைத்!

இந்த வருடம் (2021) அதிக வெப்பநிலை குவைத்தில் பதிவாகியுள்ளது.

உலகின் வெப்பநிலை மற்றும் காலநிலைத் தரவுகளை சேகரிக்கும் அமெரிக்காவின் அல் டெராடோ தகவல்களுக்கமைய குவைத்தின் இந்த வருடம் அதிக கூடிய வெப்பநிலையாக 53. 2 செல்சியஸ் பாகை பதிவாகியுள்ளது.

உலக நாடுகளில் உள்ள நகரங்களில் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாக அதிக வெப்பநிலை குவைத்தில் பதிவாகியமை இது இரண்டாவது தடவையாகும். குவைத்தின் நவாஷிப் நகரில் 53. 2 செல்ஸியஸ் பாகை வெப்பநிலை பதிவாகியுளளது. இதேவேளை, ஈரானின் அஹ்வாஸ், அல் அமிடியா ஆகிய நகரங்களில் 50.1 செல்ஸியஸ் வெப்பநிலையும் குவைத்தின் ஜஹரா நகரில் 49.7 செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அல் ராய் பத்திரிகையினால் பட்டியல்படுத்தப்பட்ட உலகின் அதிக வெப்பநிலை கூடிய 143 தலைநகரங்களில் குவைத் மற்றும் டோஹா முதலிடத்தை பெற்றுள்ளன.

காலநிலை மற்றும் வானிலை தொடர்பான விசேட ஊடகங்களான நோர்வேஜியன் டைம் மற்றும் டேட் இணையதளங்களின் பட்டியல்படுத்தலுக்கமைய குவைத் மற்றும் டோஹா ஆகிய நாடுகளின் வெப்பநிலை 48 பாகையான பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image