கட்டிட மேற்பரப்பு இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மாயம்!

கட்டிட மேற்பரப்பு இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மாயம்!

அமெரிக்காவின் மியாமி பிராந்தியத்தில் கட்டிட மேற்பரப்பு இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதகாவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 மாடி கட்டிடம் ஒன்றில் மேற்பரப்பு நேற்று அந்நாட்டு நேரப்படி 1.30 மணியளவில் இடிந்து விழுந்தது என்றும் சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக ​வேகமாக அதிகரிக்கக்கூடும் என்றும் இடிந்து விழும் சந்தர்ப்பத்தில் எத்தனை பேர் உள்ளே இருந்தனர் என்பது தொடர்பில் தம்மிடம் தகவல் இல்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts