தமிழகத்தில் மே 10ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. ஒருநாளுக்கு இந்தியாவில் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மே 10ம் திகதி காலை 4 மணி முதல் மே 24ம் திகதி காலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
• மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
• முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
• நியாய விலைக்கடைகள் 12 மணி வரை செயல்படும்.
• மளிகை, காய்கறி என அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி மட்டுமே திறக்க அனுமதி
• அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
• உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி