அன்பான மகனுக்கு அமைதியான மரணம்- இன்சுலின் செலுத்திய தாய்

அன்பான மகனுக்கு அமைதியான மரணம்- இன்சுலின் செலுத்திய தாய்

சிங்கப்பூரில், தன் மகனுக்கு இன்சுலின் ஊசிகளைப் போட்டுக் கொல்ல முயன்ற பெண்ணுக்கு 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வலியோடு, 'அமைதியாக' மரணம் விளைவிக்க அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.

அந்த 29 வயது பெண், 7 மாதங்களில், 13 சமயங்களில், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் இன்சுலின் ஊசிகளைத் தன் மகனுக்குப் போட்டுள்ளார்.

அப்போது, அந்தச் சிறுவனுக்கு 6 வயது.

தலைவலிகள், வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் ரத்த சர்க்கரை அளவும் அபாயகரமாகக் குறைந்தது.

அந்தச் சிறுவன் அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் சந்தேகம் எழுந்த மருத்துவ ஊழியர்கள், அந்தப் பெண்ணின் குற்றங்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் காவல்துறையிடம் தகவல் அளித்தனர்.

அந்தப் பெண்ணுக்கு 9லிருந்து 12 வயது இருக்கும்போது, அவர் தனது சகோதரர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின், அந்தச் சகோதரர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அந்தச் சகோதரருக்குத் திருமணமானது. அவர் மனைவியும் கர்ப்பமானார்.

அதை அறிந்த அந்தப் பெண், தனக்குக் குற்றம் இழைத்த அவர் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியற்றவர் என்று கோபமடைந்தார்.

அதனால், தான் உட்பட தன் தாயார், தனது 3 பிள்ளைகள், தனது சகோதரர் என அனைவரையும் உயிருடன் எரித்துக் கொலை செய்ய முடிவெடுத்தார்.

தன் மகன், தனக்கு விருப்பமான பிள்ளை என்பதால், அவர் மட்டும் 'அமைதியாக' மரணம் அடைய வேண்டும் என்பதால் இன்சுலின் ஊசிகளைப் பயன்படுத்தினார்.

அந்தப் பெண்ணுக்குக் கடுமையான மனநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதனால், அவர் தன் செயல்களுக்கான முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதி கூறினார்.

செய்தி மீடியாகோர்ப்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image