மக்கா பெரிய பள்ளிவாயிலை சுத்தப்படுத்த தினமும் 70,000 லீற்றர் தொற்றுநீக்கித் திரவம்
புனித றமழான் நோன்பு ஆரம்பித்ததன் பின்னர் கொவிட் 19 தொற்றிலிருந்து மக்கா பெரிய பள்ளிவாயிலை பாதுகாப்பதற்காக தொற்று நீக்கம் செய்வதற்காக தினமும் 70,000 லீற்றர் தொற்றுநீக்கித் திரவம் பயன்படுத்தப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மக்கா பெரிய பள்ளிவாயில் மற்றும் நபிகள் நாயகத்தின் பள்ளிவாயில் என்பவற்றிலகைடுமையான சுகாதார நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசங்கள் அணிவது, வழிகாட்டப்பட்ட நடைபாதைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் என்று பாதுகாப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன தடுப்பூசி போடப்பட்ட யாத்ரீகர்களை மட்டுமே நுழைய அனுமதிக்கட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரிய பள்ளிவாயிலின் அனைத்து சதுக்கங்களும் தினமும் 10 தடவைகள் கழுவப்படுவதுடன் கண்காணிப்புக்காக 200 கண்காணிப்பாளர்களும் 4,000 சுகாதாரப் பணியாளர்களும் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
புனித றமழான் நோன்பு ஆரம்பித்தன் பின்னர் முதல் 10 நாட்களுக்குள் 1.5 மில்லியன் யாத்திரிகர்கள் விஜயம் செய்துள்ளனர் . இறுதி 10 நாட்களில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Arab times