ஒன்றரை வயது சிறுவனை காலால் மிதித்த பணிப்பெண்ணுக்கு சிறை!

ஒன்றரை வயது சிறுவனை காலால் மிதித்த பணிப்பெண்ணுக்கு சிறை!

ஒன்றரை வயது சிறுவனை கீழே தள்ளி துன்புறுத்திய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 5), இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணின் ஒழுங்கு முறையற்ற செயல்களுக்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ், குழந்தையை துன்புறுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மூன்றாவது குற்றச்சாட்டு தண்டனை காலத்தின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

42 வயதான அந்த பணிப்பெண்ணின் நடவடிக்கைகள் அறையில் நிறுவப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம்
கடந்த ஆண்டு, சுலியானா காசிம் தபோக் என்ற அந்த பணிப்பெண்ணின் முதலாளி வீட்டுச் சிறுவன் வீட்டின் கம்பளத்தின் மீது வாந்தி எடுத்துள்ளான்.

பின்னர் சுலியானா கம்பளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​சிறுவன் அவரை நோக்கி நடந்துள்ளான். அப்போது தன்னுடைய முழங்கையால் சிறுவனை தள்ளி விட்டுள்ளார்.

இதனால் சிறுவன் தரையில் விழுந்து அழுதுள்ளான். அதோடு விடாத பணிப்பெண் சிறுவனை தொடர்ந்து கீழே தள்ளியும், அவனின் முழங்கால் மற்றும் காலினை மிதித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து சிறுவனின் தாய் காவல்துறையினரிடம் புகாரளித்தார். பின்னர் அவர் தனது மகனை கே.கே. மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மருத்துவர்கள் சிறுவனின் முதுகெலும்பில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து கூறினர்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், சுலியானா எட்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது S$8,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மைக்செட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image