உலக கப்பல் போக்குவரத்தை முடக்கிய சுயெஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்

உலக கப்பல் போக்குவரத்தை முடக்கிய சுயெஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்

சுயெஸ் (Suez) கால்வாயில் தரைதட்டியுள்ள பாரிய கொள்கலன் கப்பலை, அங்கிருந்து மீட்கும் பணிகளில் கப்பல்துறை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

சீனாவிலிருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த, தாய்வானின் எவர் கிறீன் மெறைன் (நுஎநசபசநநn ஆயசiநெ) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான, எவர் கிவன் (Ever Given) என்ற கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை, சுnயெஸ் கால்வாயில் தரைதட்டியது.

suez_taiwan_netherlands_shipping_routes.png

400 மீற்றம் நீளமும், 59 மீற்றர் அகலமும் உடைய குறித்த கப்பல் 20 ஆயிரம் கொள்கலன்களை தாங்கிச் சென்றுள்ளது. கப்பலின் எடை இரண்டு இலட்சம் தொன்னாகும்.

உலக கொள்கலன்களில், 30 சதவீதத்தைக் கையாளும், 193 மீற்றர் நீளமான சுயெஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கொள்கலன் வர்த்தக கடல் மார்க்கமாக கூறப்படுகிறது.

எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாயான சுயெஸ் கால்வாய், மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கிறது.

1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மானப் பணிகள், 1869 ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது.

ஆசியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரையாக கடல்வழி பயணிக்கும் கப்பல்களின் பயணங்களை இலகுவாக்கும் நோக்கில் சுயெஸ் காலவாய் உருவாக்கப்பட்டது.

இந்தக் கால்வாய் உருவாக்கப்பட்டிருக்காவிட்டால், கப்பல்கள் தென்னாபிரிக்க ஊடாக 12 நாட்களாக, 9 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

 

இந்தக் கால்வாயில் கப்பல் சிக்கியுள்ளமையினால், தற்போதுவரை சுமார் 200 கப்பல்கள்கள் கடலில் சிக்கியுள்ளன.

சமுத்திரத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய கப்பல் நெரிசல் நிலை இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாரிய கொள்கலன் கப்பல், சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ளதன் காரணமாக, சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளதாக, வர்த்தக கப்பல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நாள் ஒன்றிற்கு 9.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சரக்குகள் உரிய துறைமுகங்களை சென்றடைய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 படங்கள் - BBC

Author’s Posts