அதிர்ஷ்டத்தை அடைய முடியாதுள்ள புலம்பெயர் தொழிலாளர்

அதிர்ஷ்டத்தை அடைய முடியாதுள்ள புலம்பெயர் தொழிலாளர்

அபுதாபியில் நேற்று இடம்பெற்ற சீட்டிழுப்பில் இந்திய பிரஜையொருவர் 20 மில்லியன் திர்ஹம்களை வென்றுள்ளார். எனினும் வெற்றியாளரை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் பணியாற்றிய இந்திய புலம்பெயர் தொழிலாளரான அப்துஸ்ஸலாம் என். வி என்பவர் இவ்வருடத்திற்கான முதலாவது அதிர்ஷ்டசாலி வெற்றியாளராவார். அவர் வாங்கிய 323601 என்ற இலக்க டிக்கட் சீட்டிழுப்பில் வெற்றியடைந்துள்ளது. அவருக்கு விடயத்தை தெரிவிக்க தொடர்பு கொண்டபோது அவர் வழங்கிய இரு தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாக சீட்டிழுப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அவர் இரு தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளார். ஒரு இலக்கம் தவறாது. மற்றைய இலக்கம் தொடர்புகொள்ள முடியாதுள்ளது. அவருடைய தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளும் போது தானியங்கி ஒலி மலையாள மொழியில் இருப்பதால் அவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் குறித்த தகவல்கள் இருப்பின் உடனடியாக அறித்தருமாறு கோரப்பட்டுள்ளது கோரப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image