பைஸர் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி
அமெரிக்க மற்றும் ஜேர்மனி இணை தயாரிப்பான ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (Pfizer/BioNTech) நிறுவனங்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர பாவனைக்காக உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளுக்கு தடுப்பூசி இறக்குமதியையும், விநியோகத்தையும் விரைவாக அங்கீகரிக்க இது வழிவகுத்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான உலகளாவிய அணுகலை உறுதிசெய்வதற்கான ஒரு சாதகமான நடைமுறை இதுவாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் அதிகாரி மெரியெங்லா சிமாவ் (Mariangela Simao) தெரிவித்துள்ளார்.