இங்கிலாந்தின் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது என ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், உருகுவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நேற்று (19) இங்கிலாந்தின் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.
மேலும் நமீபியா, ருவாண்டா, சென் யுஸ்டேடியஸ் குடியரசு, வடக்கு மரியானா தீவு மற்றும் ஐக்கிய ராச்சிய வேர்ஜின் தீவுகள் என்பவற்றின் குடிமக்களும் நாளை (21) இங்கிலாந்து வருகைத் தரும் போது தனிமைப்படுத்தலில் ஈடுபடதேவையில்லை என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
இந்த வாரத்துக்குள் எந்தவொரு நாடும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஈடுபட முடியும் என்று அந்நாட்டு போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷெப்ஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.