உலகின் மிகப்பெரிய இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சேரம் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நால்வர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் கொவிட் 19 தடுப்பூசியான கொவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ள ஒக்ஸ்பர்ட் - எஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி தயாரிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று அந்நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதமொன்று 50 மில்லியன் எஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிகள் வேறு வளங்களினூடாக தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே குறித்த தடுப்பூசியை கொள்வனவு செய்துள்ளன. மின்சார ஒழுக்கு காரணமாக குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்ட்ரா மாநில அரசு தெரிவித்துள்ளது.