அபுதாபியில் 165 மீற்றர் உயர கோபுரங்கள் தகர்ப்பு

அபுதாபியில் 165 மீற்றர் உயர கோபுரங்கள் தகர்ப்பு

அபுதாபியின் மினா சயீத் பகுதியில் நான்கு, 165 மீற்றர் உயர கோபுரங்களை உள்ளடக்கிய மினா பிளாசாவின் 144 தளங்கள் இன்று (27) காலை 10 வினாடிகளில் வெற்றிகரமாக தகர்த்தப்பட்டுள்ளன.

வெடிபொருட்களைப் பயன்படுத்தி தகர்த்தப்பட்ட மிக உயரமான கட்டிடம் என புதிய கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இத்தகர்ப்பு நடவடிக்கை. மொடர்ன் ப்ரொபடீஸ் மாள்ஸர் டிவலப்பர் நிறுவனம் இப்பணியை வெற்றிகரமான நடத்தியுள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் ஆறாயிரம் கிலோ கிறாம் வெடிப்பொருட்கள் நிரப்பட்ட நான்கு கோபுரங்களில் வெடித்து சிதறியதில் வானில் புகைமூட்டம் ஏற்பட்டதாகவும் 3 மில்லியன் சதுரமீற்றர் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் துறைமுகப்பகுதியை மீளபிவிருத்தி செய்யும் நோக்கில் இக்கட்டிடம் தகர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image