கனடாவின் பல பிராந்தியங்களில் கத்திக்குத்து தாக்கதல் - 10 பேர் மரணம்1

கனடாவின் பல பிராந்தியங்களில் கத்திக்குத்து தாக்கதல் - 10 பேர் மரணம்1

கனடாவின் மத்திய சிக்கெசுவின் பிராந்தியத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் சுமார் 10பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

ஜேம்ஸ் ஸ்மித் கிறி மற்றும் வெல்டன் ஆகிய பிரதேசங்கள் உட்பட 13 இடங்களில் இவ்வாறு கத்திக்குத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலானது பைத்தியக்காரத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் இரு சகோதரர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ரொண்டா பிலெக்மோர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரோண்டா பிளாக்மோர் ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இது ஒரு தொடர் பைத்தியம் கத்தி தாக்குதல் என்று கூறினார். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரு சகோதரர்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் விளக்கமளித்துள்ளார்.

31 வயதான டேமியன் சென்டர்ஸன் மற்றும் 30 வயதான மயில்ஸ் சென்டர்ஸன் என்ற சகோதார்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும் தற்போது அவர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளனர் என்றும் அவர்களை தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் பெரும் குற்றவாளிகள் என்றும் மக்கள் இவர்கள் குறித்த அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். சிக்கெசுவின் பிராந்திய மக்களை வீட்டை விட்டு வௌியே வர வேண்டாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image