காற்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கலவரம்- நூற்றுக்கணக்கானவர்கள் பலி!

காற்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கலவரம்- நூற்றுக்கணக்கானவர்கள் பலி!

இந்தோனேஷியாவில் காற்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மைதானத்தில் இடம்பெற்ற வன்முறையினால் 129 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர், 180 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஜாவாவில் போட்டியாளர்களான பெர்செபயா சுரபயாவிடம் அரேமா எஃப்சி தோல்வியடைந்ததை அடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் எண்ணிக்கை மைதானத்தின் கொள்ளளவை விட சுமார் 4,000 பேர் அதிகமாக இருந்ததாக நாட்டின் தலைமை பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

விசாரணை முடியும் வரை இந்தோனேசியாவின் டாப் லீக்கில் அனைத்து போட்டிகளையும் நிறுத்த வேண்டும் என்று அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

இறுதி விசில் முடிந்ததும் ரசிகர்கள் ஆடுகளத்தை நோக்கி ஓடும் வீடியோக்கள் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image