கல்விக் கல்லூரிகளில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள்!

கல்விக் கல்லூரிகளில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள்!

கொவிட் 19 தொற்றுக்காக நீண்ட விடுமுறையின் பின்னர் மீண்டும் கல்வியியற் கல்லூரிகளுக்கு கற்கை நடவடிக்கைகைக்க திரும்பிய மாணவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட லொக்கர்கள் உடைக்கப்பட்டும், புத்தகங்கள், உடமைகள், மெத்தைகள் கிழிந்து நாசமாக்கப்பட்டிருப்பதையும் கண்டு பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பேராதனை தேசிய கல்வியியல் கல்லூரியிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் முன்னறிவில் எம்மை இராணுவ பஸ்களில் அழைத்துச் சென்றனர் . அதனால் எமது பெரும்பாலான உடமைகள் போட்டது போட்டப்படி அறைகளிலேயே கிடந்தன. நாம் திரும்பி வந்து பார்த்த போது பூட்டிய அறைகளில் லொக்கர்களில் இருந்த எமது உடமைகள் வௌியில் இழுத்து போட்டப்படி கிடந்தன. புத்தகங்கள் கிழிக்கப்பட்டிருந்தன. உடைகள் சிதறி கிடந்தன. மெத்தைகள் கிழிக்கப்பட்டிருந்தன. சுவர்கள் மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் காணப்பட்டது என்று மாணவர்க்ள் விசனம் தெரிவித்துள்ளனர். சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து வௌியிட்ட ஆசிரிய மாணவர்கள் தமது அடையாளத்தை வௌியிட வேண்டாம் என்று கேட்டுக்கண்டனர். நிர்வாகிகளின் எச்சரிக்கை மற்றும் புள்ளிக்குறைப்பு ஆகியவற்றை காரணம் காட்டி ஆசிரியர் மாணவர்கள் அச்சம் வௌியிட்டனர்.

College1விடுதி அறைகள் முறையாக கிருமி நீக்கம் செய்யப்படவில்லை என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. கோவிட்-19 நோயாளிகள் பயன்படுத்தும் மெத்தைகள் மாற்றப்படவில்லை, பூட்டி வைக்கப்பட்டிருந்த தலையணைகள் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன. சூட்கேஸ்களில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு உடமைகள் வெளியே எடுக்கப்பட்டன. அப்புறப்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலங்களும் இருந்தன. மாணவர்களான நாங்கள் விடுதி அறைகளை சுத்தம் செய்ய ‘சிரமதானம்’ செய்ய வேண்டியிருந்தது” என்கிறார் மற்றொரு மாணவர்.

ருஹுணு, நில்வலா மற்றும் ஹப்பிட்டிகம தேசிய கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளுக்குள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் குறித்து புகார் அளித்ததாக கல்வியியல் கல்லூரிகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனக் பிரசன்ன தெரிவித்தார்.

கொவிட்-19 கல்விக் கல்லூரிகளுக்குள் வேகமாக பரவியது. நிர்வாகம் மாணவர்களை குற்றம் சாட்டியது, ஆனால் விடுதிகள் முறையாக கிருமி நீக்கம் செய்யப்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். மாணவர்களுக்கான ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சில நிர்வாகங்கள் மாணவர்களை வீட்டிற்கு செல்லச் சொன்னாலும், சில மாணவர்களை வளாகத்திற்குள் தனிமைப்படுத்தினர். தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவின் மோசமான நிலை குறித்து புகார் தெரிவித்தனர், ”என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் கொவிட் வைரஸ் தொற்றக்குள்ளாகும் போது நிர்வாகம் பாராமுகமாய் இருப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆண் ஆசிரிய மாணவர்கள் கடுமையான காய்ச்சலினால் துன்புறும் போது சக மாணவர்களே முச்சக்கர வண்டிகளில் அவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது தங்குமிடங்கள் கிருமி நீக்கம் செய்யப்படவேண்டும். உடமைகள் சேதத்திற்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமது சேதமடைந்த உடமைகளை மீள பெருமளவுக்கு பொருளாதார வசதியில்லை. கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவியொருவர் சுட்டிக்காட்டியஎன்று ஆசிரிய மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

College2

கல்வி அமைச்சின் ஆணையாளரால் நிர்வாகத்தை கையாளும் அதே வேளையில், கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகள் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட கல்விப் பகுதியில் மட்டுமே தேசிய கல்வி நிறுவகம் ஈடுபட்டுள்ளது என்று தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, ஆசிரியர் கல்விக்கான சிரேஷ்ட ஆணையாளர் இ.எம்.எஸ் ஏக்காநாயக்க இவ்விடயம் தொடர்பில் கதைத்த போது தான் கடந்த ஒக்டோபர் மாதம் ஓய்வு பெற்று விட்டதாக தெரிவித்தார்.

கல்வியிற் கல்லூரிகளுக்கான பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் கல்விக்கான ஆணையாளர் பதவி பல வருடங்களாக நிரப்பப்படாதுள்ளது. அனைத்து கல்வியியற் கல்லூரிகளும் கொவிட் 19 தொற்றுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களாகவும் சிகிச்சை நிலையங்களாகவும் அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரானால் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சண்டே டைம்ஸ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image